அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!
நம் பூந்தமல்லி வட்டார ஜமாஅத்துல் உலமா சபைக்கென ஒரு தனி இணையதளம் உருவாக்கப்பட வேண்டும் என்பது என் போன்ற நம் சபையின் எண்ணற்ற உலமாக்களின் நீண்ட கால ஆசை. அது தற்போது அல்லாஹ்வின் கிருபையாலும் உங்கள் எல்லோரின் துஆவாலும் நிறைவேறி இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் நம் சபை சார்ந்த விஷயங்கள், நம்
சபை உலமாக்களின் விபரங்கள், நம் சபைக்கு உட்பட்ட பள்ளிகளின் விபரங்கள் மற்றும்
அங்கு நடக்கும் முக்கிய நிகழ்வுகள், நம்
சபையின் நிர்வாகம் சார்ந்த தகவல்கள், காலத்திற்கேற்ற உலமாக்களுக்குத் தேவையான
பயான் குறிப்புகள், அவசியத்திற்கேற்ற மார்க்க சட்ட விளக்கங்கள், இவ்வாறு மிகவும்
பயனுள்ள பல தகவல்கள் இன்ஷா அல்லாஹ் நம் சபையின் இந்த பிரத்யேக வலைதளத்தில்
பதிவேற்றப்படும். உலமாக்கள் பார்த்து பயனடைவதுடன் இதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும்
துஆவும் வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
முஹம்மது ஹஸன் காஷிஃபி
செயலாளர், பூந்தமல்லி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை.
No comments:
Post a Comment