கண்ணியமான பூந்தமல்லி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின்
உலமா பெருமக்களுக்கு...
நமது பூந்தமல்லி வட்டாரத்தை சார்ந்த அன்புச் சகோதரர் மர்ஹும் மௌலவி ஹாபிழ் அபுத் தாஹிர் உலவி (இமாம்: திருமுடிவாக்கம் பள்ளிவாசல்) கடந்த 29/06/2021 அன்று இறையழைப்பை ஏற்றார்கள் அவர்களின் இழப்பு தமிழக உலமாக்களுக்கு மத்தியில் மாபெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அன்றைய தினம் நமது பூந்தமல்லி வட்டார ஜமாஅத்துல்
உலமா சபையும் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையும் இணைந்து முதல் உதவியாக சில உதவிகளை வழங்கியதுடன்
ஜனாஸாவை பூந்தமல்லி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும்
முகப்பேர் கிழக்கு பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அப்துல் கரீம் பைஜி ஹழ்ரத் அவர்களும்
அழகிய முறையில் ஆடை அணிவித்து பின் தீதாருக்கு வைத்தார்கள்.
பிறகு இரண்டாம் கட்ட உதவியாக மர்ஹுமின் குடும்பத்திற்கு
நமது ஜமாஅத்துல் உலமா மற்றும் உலமாக்கள் அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் உதவிட வேண்டும்
என்று உயர்ந்த நன்னோக்கத்தில் பூந்தமல்லி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் ஆலிம்கள்
சேவைக்குழு மற்றும் உலவிகள் பேரவை மற்றும் மௌலவி அப்துல் கைய்யூம் பாக்கவி அவர்கள்
இணைந்து முயற்சி செய்ததின் விளைவாக மர்ஹுமின் குடும்பத்திற்கு பிற்காலத்தில் உதவும்
விதமாக சுமார் ஏழு லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரம் ரூபாய் சேகரிக்கப்பட்டு அதில் ஏழு
லட்சம் மதிப்புள்ள (1400 சதுர அடி - இரு பிள்ளைகளுக்கும்: 700 +
700 =1400 ) கல்பாக்கம் அருகில்
இடம் வாங்கி பத்திரப் பதிவு செய்யப்பட்டு (பத்திரப் பதிவு செலவாக ஐம்பத்தி ஒன்பதாயிரம்
) குடும்பத்தினரிடம் முப்பதாயிரம் ரூபாயுடன் இன்று 18/09/2021 சனிக்கிழமை காலை 8:00 மணியளவில் பூ.வ.ஜ.உலமா சபையின் தலைவர்: மௌலவி முஹம்மது
இஸ்மாயில் பாக்கவி ஹழ்ரத்,
பொருளாளர்: மௌலவி முஹம்மது ஃபஹ்மீ காஷிஃபி ஹழ்ரத்,
செயலாளர்: மௌலவி முஹம்மது ஹஸன் காஷிஃபி,
துணைச் செயலாளர்: ஹாபிழ் சாதிக் பாட்சா ஹழ்ரத்,
கோடம்பாக்கம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர்: மௌலவி அப்துல் மஜீத் உலவி ஹழ்ரத்,
உலவிகள் பேரவை பொறுப்பாளர்: மௌலவி அப்துர் ரஹீம்
உலவி ஹழ்ரத் அவர்கள் ஆகியோர் இணைந்து ஒப்படைத்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
இதன் தொடரில் அவ்விடத்தில் கட்டுமான பணிக்களை விரைவாக
துவக்க திருமுடிவாக்கம் பள்ளிவாசல் நிர்வாக பெருமக்களை அணுகி பேச முயற்சிகள் மேற்கொள்ளப்
படுகின்றது. அல்ஹம்துலில்லாஹ்...
அதுபோல் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக பெரும்
முயற்சி நடைபெற்று வருகிறது.
இதற்காக முழுமையான முறையில் ஒத்துழைப்பு மற்றும்
நிதி உதவிகளை வழங்கிய மரியாதைக்குறிய பூந்தமல்லி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் உலமாக்கள்,
ஆலிம்கள் சேவைக் குழு நிர்வாகத்
தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மற்றும் உலவிகள் பேரவை நிர்வாக பெருமக்களுக்கும்
மற்றும் தயாள மனம் படைத்த மார்க்கத்தின் ஆன்றோர்கள் சான்றோர்கள் அனைவருக்கும், அது போன்று இந்த இடம் வாங்குவதற்காக தனது அனைத்து
வேலைகளையும் ஒதுக்கி முழுமையாகவும் விரைவாகவும்
துல்லியமாகவும் முடித்துத் தந்த பூந்தமல்லி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் துணைச்
செயலாளர்: ஹாபிழ் சாதிக் பாட்சா ஹழ்ரத் அவர்களுக்கும் நமது வட்டாரத்தின் சார்பில் துஆக்களையும்
நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வஸ்ஸலாம்.
பூந்தமல்லி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை.


No comments:
Post a Comment